யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
2 months ago
யாழ்ப்பாணத்தில் ரயில் மோதி தூக்கி வீசப்பட்டதில் மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
சுண்டுக்குழியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாஸன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபருக்கு வாய்பேச முடியாது என்பதுடன் காதும் கேட்காது.
இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளை ரயில் மோதி தூக்கி வீசப்பட்டார்.
இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.