முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில் போட்டியிடமாட்டார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் பஸில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடமாட்டார்கள்.
அத்துடன், அவர்களுக்கு தேசியப் பட்டியலிலும் இடம் வழங்கப்படாது என்று சிறீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
மேலும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷவுக்கு மட்டும் தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்பட்டுள்ளது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
மேலும், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சசீந்திர ராஜபக்ஷ மொனராகலை மாவட்டத்திலும் நிபுண ரணவக்க மாத்தறை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளனர் என்றும் தெரி விக்கப்பட்டது.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.