கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளன.
கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளன.
பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத் தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன் ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு ஸ்கார்பரோ ரீகிரி யேசன் சென்டர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி இந்த வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வின் தலைமையுரையை பேராசிரியர் இ. பாலசுந்தரம் வழங்குவார்.
அத்துடன் சிறப்புரையை தமிழர் தகவல் ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் வழங்குவார்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர் இளங்குமரன், கனடா தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர் கா.யோ.கிரிதரன், மற்றும் எழுத்தாளர் திருமதி. சிறி ரஞ்சினி ஆகியோர் வழங்குவர்.
பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை அரசியல் ஆய்வாளர் லெனி மரியதாஸ் நிகழ்த்துவார்.
அதன் பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் மீரா பாரதி ஆற்றுவார்.
அத்துடன் இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை கவிஞர் அகனி சுரேஷ் ஆற்றுவார்.
அத்துடன் இந்நூல் வெளியீட்டு நிகழ்வின் சிறப்புரையையும், நூலாசிரியரின் ஊடக எழுத்து பற்றி உலகத் தமிழர் ஆசிரியர் கமல் நவரட்ணம் வழங்குவார்.
கனடாவில் நிகழும் இந்த நூல் வெளியீட்டின் இறுதியில் ஏற்புரையை நூலாசிரியர் ஐங்கரன் விக்கினேஸ்வரா நிகழ்த்துவார்.