எக்ஸ்” என்பது ஒரு நச்சு ஊடக தளம் என தி கார்டியன் ஆங்கில செய்தி நிறுவனம் கடுமையாக விமர்சித்துள்ளது.
எக்ஸ்” என்பது ஒரு நச்சு ஊடக தளம் என தி கார்டியன் ஆங்கில செய்தி நிறுவனம் கடுமையாக விமர்சித்துள்ளது.
உலகளவில் பிரபலமாக இருந்த ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தி எக்ஸ் எனப் பெயர் மாற்றியது முதல் ஏட்டிக்குப் போட்டியாகப் பல விடயங்களைச் செய்து வருகிறார் தொழிலதிபர் எலான் மஸ்க்.
2022இல் எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாகியாக பதவியேற்ற வேகத்தில் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியது, ஊழியர்களை பணிநீக்கம் செய்தது, பயனர்களிடம் பணம் வசூலிக்க ஆரம்பித்தது என தனது இஷ் டப்படி மாற்றங்களைச் செய்து வருகிறார் எலான் மஸ்க்.
இதனால் பலரது விமர்சனங்களுக்கு ஆளானாலும் அவர் தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக இல்லை.
இதனால் உலகளவில் அதிருப்தியடைந்த பயனர்கள், கூட்டமாக எக்ஸ் தளத்தைவிட்டு வெளியேறினர்.
இதன் தொடர்ச்சியாக 200 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இங்கிலாந்தைச் சேர்ந்த 'தி கார் டியன்' ஆங்கில செய்தி நிறுவனம் எக்ஸ் தளத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
எக்ஸ் என்பது ஒரு நச்சு ஊடக தளம் என தி கார்டியன் முன் வைத்த விமர்சனத்தை வரவேற்றும், கண்டித்தும் கருத்துகளை பதிவிடும் பயனர்களுக்கு மத்தியில் மோதல் வலுத்துள்ளது.