இரத்மலானை அரசினர் விடுதியில் மது போதையில் வடமாகாண கல்வி அதிகாரிகளால் இடம்பெற்ற சீர்கேடு தொடர்பில் விசாரணை முடிவடைந்து ஒழுக்காற்று நடவடிக்கை.

4 months ago


இரத்மலானை அரசினர் விடுதியில் மது போதையில் அசாதாரணமாக நடந்து கொண்ட அதிகாரிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முற்றுப்பெற்று தொடர் ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண பிரத செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் குறித்த அதிகாரிகளின் பெயர் பதவி நிலைகளைக் கோரிய தகவல் கோரிக்கை படிவம் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படும் வரையில் மறுக்கப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் அலுவலகம் எழுத்து மூலம் தெரிவித்துள்ளது.

2023 ஜனவரி மாதம் க.பொ.த பரீட்சைக் கூட்டத்திற்கு சென்ற கல்வி அதிகாரிகள் சிலர் இரத்மலானை அரசினர் சுற்றுலா விடுதியில் மது போதையில் அசாதாரணமாக நடந்து கொண்டமை தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளு மாறு பிரதம செயலாளர் அலு வலகம் வடமாகாண கல்வி அமைச்சுக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி இருந்தது. வடமாகாண கல்வி அமைச்சு குறித்த விடயம் தொடர்பாக வடமாகாண கல்வித் திணைக்களத்திடம் விளக்கம் கோரிய நிலையில் உரிய காலப் பகு தியில் வட மாகாண கல்வித் திணைக்களம் கல்வி அமைச்சுக்கு பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் வடமாகாண வடக்கு கல்வி பிரதம செயலாளர் அலுவலகம் குறித்த விடயம் தொடர்uன விசாரணை அறிக்கை கிடைக்க பெறும் வரை எந்த ஒரு அதிகாரிகளும் இரத்மலானை அரச விடுதியை பயன்படுத்த தடை விதித்து எழுத்து மூலம் கடிதம் அனுப்பி இருந்தது. இந்திலையில் வட மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்த ஜோண் குயின்ரஸ் பணியிட மாற்றம் பெற்று கொழும்புக்குச் சென்ற நிலையில் புதிய மாகாண கல்வி பணிப்பாளரின் கீழ் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டது. கடந்த காலங் களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளின் பிரகாரம் அதிகாரிகள் மீதான விசாரணைகள் முடிவுக்கு வந்த நிலையில் தொடர் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த ஒழுக்காற்று விசா ரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட அதிகாரிகள் தொடர்பான விவரங்களை தருமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வட மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திடம் கேட்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர் நடவடிக்கையில் உள்ளதால் அதிகா ரிகளின் பெயர், விவரங்களை வெளியிட பிரதம செயலாளர் அலுவலகம் மறுத்துள்ளது. இரத்மலானை அரச ஓய்வு விடுதியில் மது போதை யில் அசாதாரணமாக நடத்து கொண்ட அதிகாரிகள் தொடர்பான விசாரணை இரண்டு வருடங்களாக இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.