உற்பத்தியாளர்களிடம் மருத்துவ வழங்கலுக்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து மருத்துவ வழங்கல்களுக்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல்திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றபோதே அமைச்சரவைப் பேச்சாளர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காக கொள்வனவு செய்தல் ஒப்பந்தப் பொறிமுறையின் கீழ் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
15 ஆண்டுகளுக்கான பின்னரான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்படும் முன்னுரிமையின் அடிப்படையில் குறித்த மருந்துகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
விநியோகிக்கப்படும் மருந்துகளின் விலையைத் தீர்மானிப்பதற்காக விலை நிர்ணயக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளைக் கொள்வனவு செய்தல் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.