






































பொது நிர்வாக உள்நாட்டுவலுவல் அமைச்சினால் அமைச்சின் ஒழுங்கமைப்பின் ஒவ்வொரு மாவட்ட செயலகங்கள் தோரும் தேசிய சுதந்திர தினத்தினை எளிமையான முறையில் கொண்டாடப்படுவதற்கான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது..
அந்த வகையில் இலங்கையின் 77வது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் முன்றலில் தேசிய மறு மலர்ச்சிக்காக அணிதிரள்வோம் என்னும் கருப்பொருளில் சிறப்பாக இடம்பெற்றன...
யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் செல்ல மாவட்ட செயலாளர்கள்,பதவிநிலை அதிகாரிகள் அரச, உத்தியோகத்தர்கள், இராணுவ,பொஸில்,கடற்படை, விமானப் படைகளின் அதிகாரிகள்,பொதுமக்கள் மாவட்ட செயலக முன்றலில் அழைத்து வரப்பட்டனர்.
உத்தியோக பூர்வமாக அழைத்துவரப்பட்டு பின்னர் காலை 08.10 மணியளவில் தேசியக் கொடியினை யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஏற்றி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தேசியகீதம் பாடப்பட்டு பின் மாவட்ட செயல கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி அவர்களால் நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்திரதின செய்தியினையும் காணொளி மூலமாக பார்வையுற்றனர்..
பின்னர் சர்வமத ஆசியினைத் தொடர்ந்து ஜனாதிபதியின் சுதந்திரதின வாழ்த்து செய்தியினையும்,யாழ் மாவட்ட முன்னேற்ற வாழ்த்துச்செய்தியினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் வாசித்தார்...
இங்கு யாழ் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) செ.ஸ்ரீமோகனன்,யாழ் மாவட்ட பிரதி பொஸில் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க,மற்றும் மாவட்ட இராணுவ, கடற்படை,விமானப்படை ஆகிய தலைமையக கட்டளையிடும் பதவிநிலை உயர் தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சாரண மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
