எதிரணியில் இருந்த போது பயங்கரவாதச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கூறி வந்த அநுர ஜனாதிபதியானதும் பல்டி அடித்தார்

2 months ago



பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பிழையொன்றுமில்லை. அது பயன்படுத்தப்பட்டு வந்தவிதமே தவறு என்று ஜனாதிபதி செயலகத்தின் சட்டத்துறை இயக்குநர் ஜே. எம். விஜயபண்டார தெரிவித்திருக்கின்றார்.

எதிரணியில் இருந்த போது பயங்கரவாதத் தடைச் சட்டம் மிக மோசமானது எனத் தெரிவித்து அதை முழு மூச்சில் - ஆக்ரோஷமாக எதிர்த்து வந்தவர் அநுர குமார திஸாநாயக்க.

அந்தச் சட்டத்தை அடியோடு நீக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்தவர்.

இப்போது ஜனாதிபதியாகி, அந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிரயோகிக்கும் தனித்துவ அதிகாரம் தன் தரப்புக்கு வந்ததும் பிளேட்டை மாற்றிப் போடுகின்றார் அநுரகுமார திஸாநாயக்க.

தேசிய மக்கள் சக்தி அரசு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஒழிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி செயலகத்தின்          சட்டத்துறை இயக்குநர் ஜே. எம். விஜய பண்டாரவை மேற்கோளிட்டு “தி மோர்னிங்” என்ற ஆங்கிலப் பத்திரிகை நேற்றுக் காலை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டம் குறித்து எந்தவித நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.

புதிய நாடாளுமன்றத்தில் அது குறித்து ஆராயப்பட்டு, அந்தச் சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத்              தெரிவித்திருக்கின்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு ஒழிக்கப் போவதில்லை, சில மாற்றங்களை மட்டுமே அதில் செய்ய முன்வரும் என்பது விஜித ஹேரத்தின் கருத்து தெளிவுபடுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.



அண்மைய பதிவுகள்