டென்மார்க் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களினால் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வானது கடந்த (19.11.2024) அன்று முதல் (21.11.2024) வரை டென்மார்க் கொப்பனேகன், ஓடன்ச மற்றும் ஓகூஸ் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் மிகவும் எழுச்சியுடன் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த மறவர்களை நினைவு கூர்ந்து கொடி வணக்கம், பொதுச் சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம், அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர் நினைவுகளை சுமந்த கவிதைகள், மாவீரர் கானங்கள், சிறப்புரைகள், விபரணக் காட்சிப்படுத்தல் என நிகழ்வுகள் எமது இளைய தலைமுறையினரால் மிகவும் உணர்வுபூர்வமாக நடாத்தப்பட்டது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலை தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுப்பது போல் எமது அடுத்த தலைமுறையினர், மாவீரர்களின் கனவினைச் சுமந்து செல்கின்றது பெருமையாகவும் நம்பிக்கையாகவும் உள்ளன.
வழமைபோல் டென்மார்க்கில் எதிர்வரும் (27.11.2024) அன்று கேர்ணீங் மற்றும் கொல்பேக் நகரங்களில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.