மன்னாரில் இருந்து கொழும்புக்கு கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சா வவுனியாவில் சிக்கியது

5 months ago


மன்னாரில் இருந்து கொழும்புக்கு கூலர் வாகனத்தில் கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சா வவுனியாவில் சிக்கியது

மன்னார், பேசாலை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 28 கிலோ 760 கிராம் கேரளா கஞ்சா வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கடத்தப் பயன்படுத்தப்பட்ட கூலர் வாக னத்துடன் இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரி வித்தனர்.

நேற்று அதிகாலை ஒரு மணியள வில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக் கொடியின் அறிவுறுத்தலின் நிமித்தம் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ன்ஸ் பெக்டர் ரிஸ்வி தலையிலான குழுவினரே இந்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார், பேசாலை பகுதியிலிருந்து கூலர் ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கொழும்பு நோக்கிக் கஞ்சா கடத்தப்பட்ட போதே பொலிஸார் அதனைக் கைப் பற்றியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது கூலர் ரக வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளமையுடன், சந்தேக நபர்களாக பேசாலை பகுதியை சேர்ந்த 27 மற்றும் 30 வயதுடையை இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசராணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை வவுனியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் எனவும் பொலி

ஸார் மேலும் தெரிவித்தனர்.