ஜனாதிபதியாக பொறுப்பேற்று மிகக் குறுகிய காலத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும், சஜித் தெரிவிப்பு.
ஜனாதிபதியாக பொறுப்பேற்று மிகக் குறுகிய காலத்தில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
மானிப்பாயில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்- மாகாண சபை தேர்தலை மிகக் குறுகிய காலத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு அதன் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கு எடுத்துக்கொள்ள மாட்டேன் என்ற உத்தரவாதத்தை இங்கே அளிக்கிறேன்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை முன்னி லைப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை மிகவிரைவில் நடத்துவேன்.
தொழில் வாய்ப்பற்றிருக்கும் இளையோருக்கான தொழில் வாய்ப்புகளை உற்பத்தித் துறையினூடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது யாழ்ப்பாணத்துக்கு அதிக எண்ணிக்கையிலான வீடமைப்புத் திட்டங்களை பெற்றுக்கொடுத்தேன். மாதிரி கிராமங்களையும் அமைத்தேன். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்கா லத்தில் அவை இடைநிறுத்தப்பட்டன.
நான் ஆட்சியை பொறுப்பேற்றவுடன் அவை அனைத்தும் மீள ஆரம்பிக் கப்படும்.
வடக்கிலும் கிழக்கிலும் யுத்தத்தி னால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நாம் தீர்வை பெற்றுக் கொடுப்போம்.
விசேடமாக நல்லிணக்கத்தில் காணப்படும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்திலே அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையை சர்வதேச கல்வித் திறனுடன் கூடிய தொழில்நுட்ப நிலையமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்-என்றார்.