
கனடாவிற்குள் பிரவேசிக்கும் குடியேறிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானம்
இந்த ஆண்டில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் குடியேறிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் சில ஆண்டுகளுக்கு இவ்வாறு நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இந்த ஆண்டில் ஒட்டு மொத்தமாக ஒரு லட்சத்து ஐந்தாயிரம் குடியேறிகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கனடாவில் வசித்து வருபவர்கள் நிரந்தர வதிவிட உரிமை கோரும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
முதல் தடவையாக இந்த ஆண்டு தற்காலிகமாக வதிவோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
எவ்வாறு எனினும் வழமையாக நாட்டுக்குள் உள்வாங்கப்படும் குடியேறிகளின் எண்ணிக்கையில் இருந்து கணிசமான அளவு தொகை குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கான அனுமதியும் 10 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
