யாழ்ப்பாணம் நோக்கி நேற்றுக்காலை பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.
இளையதம்பி சிவசுப்பிரமணியம் (வயது -71) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் பயணித்தவர்களால் அவர் உட னடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறப்பு விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.