
வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மாவட்ட மது ஒழிப்புப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மாவட்ட மது ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கஜேந்திரன் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின்போது தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20,30 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
அவர்கள் சுந்தரபுரம், குழுமாட்டுசந்தி, கல்மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
மேலதிக விசாரணைகளின் பின் அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
