வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் இம்முறை சிவராத்திரி விரத பூஜைகள் விபரங்களைப் பெற்ற பொலிஸார்

1 month ago



வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் இம்முறை சிவராத்திரி விரத பூஜைகள் காலை முதல் மாலை 6 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளன.

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோரை நெடுங்கேணி பொலிஸார் அழைத்து விவரங்களைப் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக ஆலயத்தின் பூசகர் மதிமுகராசாவிடம் கேட்டபோது,

இம்முறை சிவராத்திரி விரத பூஜைகளை காலை முதல் மாலை 6 மணிவரை முன்னெடுப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

6 மணியின் பின்னர் பிறிதொரு பகுதியில் சிவனுக்கான இரவு அனுஸ்டானங்களை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - என்றார்.

அதேவேளை கடந்த காலங்களில் நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட் திணைக்களத்தின் கீழ் உள்ளதாகத் தெரிவித்து, அந்தத் திணைக்களத்தினர் மற்றும் நெடுங்கேணிப் பொலிஸாரால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அது தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்ததுடன் பொலிஸாரால் தாக்கல்செய்யப்பட்ட வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அண்மைய பதிவுகள்