அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு முன்னணி வேட்பாளர்களான டிரம்ப் கமலா ஹாரிஸ் இடையே இன்று காரசாரமான விவாதம் .

3 months ago


அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு முன்னணி வேட்பாளர்களான டிரம்ப் கமலா ஹாரிஸ் இடையே இன்று காரசாரமான நேரடி விவாதம் நடை பெற்றது.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில், கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாதம் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியாவில், இலங்கை நேரப்படி இன்று காலை நடந்தது.

ஏ.பி.சி. நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர், அமெரிக்காவின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம்      பெற்றிருந்தன.

இந்த விவாதம் 90 நிமிடங்கள் வரை நடைபெற்றது. எனினும்,          நிகழ்ச்சியில் பங்கேற்க பார்வையாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

விவாத நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் பேசும்போது,

“விற்பனை வரி எதனையும் நான் விதிக்கவில்லை. மற்ற நாடுகளுக்கே நாம் வரிகளை விதித்து வருகிறோம்.

சீனாவிடமிருந்து கோடிக்கணக்கான டொலர்களை நாம் பெற்று வருகிறோம் என்பது உங்களுக்குத் தெரிந்த விடயம்.

ஆனால் இன்றோ. நம்முடைய பொருளாதாரம் பயங்கர நிலையில் உள்ளது. ஏனெனில் பணவீக்கத் தாக்கமே அதற்குப் பெரிய காரணம். அமெரிக்க வரலாற்றிலேயே படுமோசம் என்றளவில் பணவீக்கம் காணப்படுகிறது.

இதனால், நடுத்தர வகுப்பு மக்கள் மட்டுமின்றி ஒவ்வொரு வகுப்பினரும் பொருளாதார பேரிடரில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

நம்முடைய நாட்டிற்கு சிறைகளில் இருந்தும், மனநல காப்பகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சேர்கின்றனர். அவர்கள் நம்முடைய வேலைகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆபிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானிக்குகள் அவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.

அமெரிக்காவின் பல்வேறு      நகரங்க யளைப் பாருங்கள். ஓஹியோ, கொல ராடோ மாகாணங்களில் உள்ள நகரங் களை அவர்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

இந்த மக்களையே கமலாவும், பைடனும் நம்முடைய நாட்டிற்குள் வர அனுமதித்து உள்ளனர். அவர்கள் நாட்டை அழித்து கொண்டிருக்கி றார்கள். அவர்கள் ஆபத்து நிறைந்த வர்கள். அதிகளவிலான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள்.

நம்மு டைய நாட்டின் வரலாற்றிலேயே, மிகச் சிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக நான் உருவாக்கி வைத்திருந்தேன். இதனை மீண்டும் நான் உருவாக்குவேன். இன்னும் சிறப்பாக ஆக்குவேன்" என்றார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய கமலா ஹாரிஸ்,

“டிரம்ப் தனது பதவிக் காலத்தில் வேலை வாய்ப்பின்மையை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிட்டார். ஒரு நூற்றாண்டில் பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் வகையில் பெருந்தொற்றில் விட்டு விட்டு அவர் சென்றார்.

நம்முடைய ஜனநாயகத்தின் மீதும் கடுமையான தாக்குதல் நடந்தது. என்னுடைய திட்டம் பொருளாதாரத்திற்கு வலுச் சேர்க்கும். உண்மையில் மக்களுக்கான திட்டம் எதுவும் டிரம்பிடம் இல்லை. ஏனெனில் அவரை பாதுகாப்பதிலேயே அவருக்கு ஆர்வம் அதிகம். அதனை விடுத்து உங்களை அவர் கவனிக்கமாட்டார்.

டிரம்பின் நிர்வாகம், வர்த்தக   பற்றாக்குறை என்ற நிலைக்குக் கொண்டு சென்றது. சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டார்.

கொரோனா பெருந்தொற்றின் போது, அதன் தோற்றம் பற்றிய      தகவல்களை வெளியிடும்படி கேட்டபோது. சீனா அதனை கவனத்தில் கொள்ளவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம்,

ஆனால், டிரம்ப் என்ன கூறினார்? சீன அதிபர் ஜின்பிங்குக்கு நன்றி என எக்ஸ் பதிவில் கூறினார்" என்று கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.