இலங்கை ஜனரஜ சுகாதார சேவைச் சங்கத்தின் பரிசளிப்பு விழா வவுனியா கொறவப் பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று நடைபெற்றது.
இதன் போது 2023 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டு பல்கலைக் கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் என 200 பேருக்கு ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மருத்துவமனை பணிப்பாளர்கள், தாதியர்கள், மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.