யாழ்.வடமராட்சி பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜே. சி. பி. வாகனம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
2 months ago
யாழ்.வடமராட்சி கரணவாய் கிழக்கு குருக்கள் குடியிருப்புப் பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜே. சி. பி. வாகனம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் இடம்பெற்றது.
ஜே.சி.பி. வாகனம் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற நெல்லியடி பொலிஸார், அயலவர்களின் உதவியுடன் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் ஜே.சி.பி வாகனம் முற்றாக சேதமடைந்தது.
சம்பவம் தொடர்பில் வாகன உரிமையாளரால் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.