அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக் வாகனம் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர்
3 months ago


அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக் வாகனம் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவருடதினத்தன்று பொதுமக்கள் அதிகமாக காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்படும் போர்பென் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
டிரக் வண்டியொன்று வேகமாக வந்து பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அதிலிருந்த நபர் ஒருவர் இறங்கி பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்,பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
