வெப்ப மண்டல புயல் காரணமாக கிழக்குக் கனடாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

4 months ago


வெப்ப மண்டல புயல் காரணமாக கிழக்குக் கனடாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேற்று வெள்ளிக்கிழமை கிழக்குக் கனடாவின் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.

இதனால் தெற்கு ஒன்ராரியோ, கியூபெக் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

ஒன்ராரியோ, கோர்ன்வோல் முதல் கியூபெக்கில் கியூபெக் சிட்டி வரை திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் சிறிய நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன எனவும் எச்சரிக்கப்படுகிறது.

ஓட்டாவா கடுமையாக பாதிக்கப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நேற்று முழுவதும் 50 முதல் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது.

நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை 40 மில்லி மீற்றர் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டது.

அண்மைய பதிவுகள்