இந்தியா, பிரித்தானியா, சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 4 நாட்களில் மாத்திரம் 21 ஆயிரத்து 298 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி, இந்தியாவிலிருந்து 5 ஆயிரத்து 245 பேரும், பிரித்தானியாவிலிருந்து ஆயிரத்து 741 பேரும், சீனாவிலிருந்து ஆயிரத்து 422 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 31 ஆயிரத்து 547 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.