பல சுயேச்சை வேட்பாளர்கள் 'சார்பு' வேட்பாளர்களாவர்! மகிந்த தேசப்பிரிய குற்றச்சாட்டு.

4 months ago


ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் “சார்பு” வேட்பாளர்களாக பல சுயேட்சை வேட்பாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பல சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பிரதான வேட்பாளருடன் தொடர்புடையவர்கள் என்பது வெளிப்படையான விடயம் தேர்தலில் வாக்குகளைப் பெற அவர்கள் சார்பு வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

என்னால் சுயேச்சை வேட்பாளர்கள் குறித்து மோசமாக எதனையும் தெரிவிக்க முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகின்றார். என்னுடைய அனுபவத்தின் மூலம் பல பிரதான வேட்பாளர்களின் சார்பு வேட்பாளர்களாக பல சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பதை என்னால் தெரிவிக்க முடியும். ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்காக அந்தக் சுட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய 4 பாராளுமன்ற உறுப் பினர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான எந்த சவாலையும் எதிர்கொள்ள நான் தயார். புதிய விதிமுறைகளின் மூலமே இந்த நிலையை மாற்றி யமைக்க முடியும். உள்ளூராட்சி தேர்தல்களில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீடு முறையை மாகாண சபை பொதுத் தேர்தலுக்கும் விரிவாக்க வேண்டும் - என்றும் அவர் கூறினார்.

அண்மைய பதிவுகள்