கருத்துக் கணிப்புகளைத் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும் - சோனியா காந்தி தெரிவிப்பு

7 months ago

கருத்துக் கணிப்புகளைத் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும்" என காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரான கலைஞர் கருணாநிதியின் 101 ஆவது பிறந்த தினமான நேற்று(03) டில்லியில் உள்ள தி.மு.க அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பா.ஜ.கவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன.

மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளில் வென்றாலே போதும் என்ற நிலையில், பா.ஜ.க கூட்டணி 350 முதல் 380 தொகுதிகள் வரை வெல்லும் என்று சில கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன.

பொறுத்திருந்து பாருங்கள். கருத்துக் கணிப்புகளை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும். நிச்சயம் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்."என்று தெரிவித் துள்ளார்.

இதேவேளை, கடந்த 2004 ஆம் ஆண்டு பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியமைக்கும் என்றே கூறப்பட்டிருந்தன.

ஆனால், கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.