கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுக்கு இலக்கானார்.
கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள காதலியை 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பார்க்க வந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டுக்குப் இலக்காகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிக்கு வந்த வேளை முற்பகல் 11 மணியளவில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார். இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞர் முன்னர் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் மானிப்பாய் ஆலடிப்பகுதியில் வீசப்பட்டிருந்தார்.
அவரை மீட்ட பொலிசார் யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்தான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.