
யாழ்ப்பாணத்தில் வர்த்தகப் பிரிவில் 2023ஆம் ஆண்டு க. பொ. த. உயர்தரப் பரீட் சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது.
விடியல் அமைப்பினால் இந்த கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்காலத்தில் க. பொ. த. உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள ஏனைய மாணவர்களுக்கும் உற்சாக மூட்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து வெற்றிக் கிண்ணங்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
இதில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக மனிதவள முகாமைத்துவ பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர் ரொபின்ஸன் கலந்துகொண்டதுடன், ஆசிரியர்களான எஸ். பிரதீபன், ஆர். தர்சன், திருக்குமாரன் ஆகியோரும், சட்டத்தரணிகளான சுரேக்கா, உஷாந்தினி ஆகியோரும் விடியல் அமைப்பினரும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
