தீர்வுத் திட்டத்தை முன்னகர்த்த தமிழ்த் தேசியக் கட்சிகள், ஐக்கிய முன்னணியை அமைத்துப் பணியாற்றவும்.--யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் தெரிவிப்பு

2 months ago



அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை முன்னகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள், ஐக்கிய முன்னணியொன்றை அமைத்துப் பணியாற்ற வேண்டும் என யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.

நல்லாட்சிக் காலத்தில் வரையப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ஜிய' எனும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு வரைபினை தமிழ் மக்களின் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்ளச் செய்வதனூடாக முன்னெடுப்பதற்கான முனைப்புகள் இடம்பெற்ற வண்ணமுள்ளன.

இந்தச் சூழ்நிலையில் பரந்துபட்ட ஐக்கிய முன்னணி யொன்றை அமைத்து தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டமாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தையே தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகள் முன்வைக்க வேண்டும்.

அத்துடன் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஏக்கிய ராஜ்ஜிய வரைபுகளை முற்றாக எதிர்ப்பதற்கு முன்வர வேண்டும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களாணையை மீறிய கடந்த கால செயல்களின் விளைவே அவர்களின் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுக்கு ஏற்பட்ட ஆசனங்களின் குறைவுக்குக் காரணமாகும்.

தமிழ்த் தேசியத்தை தேர்தல் அரசியலுக்கு அப்பால் மக்களை அரசியற்படுத்தி, அணிதிரட்டி மக்கள் அரசியலை முன்னெடுக்க தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தவறிவிட்டன - என்றார்.



அண்மைய பதிவுகள்