தமிழ்நாட்டில் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு நாளை நடைபெறுகிறது.
விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு நாளை நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய், 100 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியை ரிமோட் மூலம் ஏற்றி வைக்கவுள்ளார்.
அதற்காக நேற்று பகல் 12:30 மணி அளவில் மாநாட்டு முகப்பில் விழுப்புரத்தைச் சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான இடம் 225 சதுர அடியை ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து, அதில் 100 அடி உயர கொடிக் கம்பம் நடப்பட்டது.
த.வெ.க. மாநாட்டு மேடையில் இருந்து நடுவே அமைக்கப்பட்டுள்ள ரேம்பில் நடந்து வந்து கட்சிக் கொடியை நடிகர் விஜய் ரிமோட் மூலம் ஏற்றி வைக்கவுள்ளார்.
மாநாட்டின் மேடை அருகே இணையதள வசதிக்காக தனியார் கம்பெனியின் செல்போன் டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
மாநாடு ஏற்பாட்டின் இறுதிக்கட்ட பணிகளாக மாற்றுத் திறனாளிகள் அமர தனி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டு நிகழ்வுகளை பார்வையாளர்கள் பார்க்கும் வகையில் 600 பெரிய எல்.இ.டி. திரைகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு வருகின்றன.
மாநாட்டுக்கு இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், கட்சித் தொண்டர்கள் என 2 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்த்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸார் செய்து வருகின்றனர்.
மாநாட்டில் வரும் தொண்டர்களுக்கு உணவு வழங்க சமையல் கலைஞர்கள் குழுவினர்கள் வி.சாலையில் உள்ள திருமண மண்டபத்துக்கு வந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டு பணிக்காக ஒருநாள் முன்னதாகவே தாங்கள் ஏற்கெனவே “புக்" செய்த ஓட்டல் அறைகளில் வந்து தங்க ஆரம்பித்தனர்.