இஸ்லாம் மதத்தை அவமதித்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறை

3 months ago



இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றத்துக்காகப் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 9 மாத சிறைத் தண்டனையை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்துள்ளது.

அத்துடன், 1,500 ரூபா அபராதம் விதிப்பதாகவும் தீர்ப்பை்அறிவித்து கொழும்பு மேலதிக நீதிவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.

குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமையால் முன்னர் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அடுத்தே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி கிருலப்பனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய். அதைத் துடைத்தெறிய வேண்டும்.” - என்று ஞானசார தேரர் கூறியிருந்தார்.

ஞானசார தேரரின் இந்தக் கூற்று இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல் என்று குற்றம் சாட்டி குற்றவியல் சட்டத்தின் 291ஆவது பிரிவின் கீழ் பொலிஸார் மேற்படி வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.

அண்மைய பதிவுகள்