யாழில் இடம்பெற்ற 4 ஆவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் அதன் பதில் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது உயிரிழந்த ஒன்பது உறவுகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது வடமாகாண அவைத் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவருமான சி.வி. கே. சிவஞானம், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.