யாழ்.பருத்தித்துறை ஆதார மருத்துவமனை விடுதியிலிருந்து மருத்துவர் ஒருவரின் சடலம் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே மருத்துவமனையின் பெண் நோயியல் மருத்துவரான திருநெல்வேலியைச் சேர்ந்த பிரேமானந்தராசா கிரிஷாந்(வயது 30) என்பவராவார்.
விடுதியில் தங்கியிருந்தவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக மருத்துவரின் உறவினர் ஒருவர் மருத்துவமனை நிர்வாகத்துக்கு அறிவித்திருந்தார். இதையடுத்து,
அவரின் விடுதியை திறந்த போது மருத்துவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
அதிகளவான மயக்க மருந்தை உடலில் செலுத்திக் கொண்டமையே மரணத்துக்குக் காரணமென பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி கனகசபை வாசுதேவா மேற்கொண்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
