இலங்கையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
2 months ago
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி கொண்டாட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் விசேட கவனம் செலுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபரால், சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
அறுகம் குடா பகுதியில் அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல் இராணுவத்தின் நடமாட்டம் அறுகம் குடா பகுதியில் அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல் இராணுவத்தின் நடமாட்டம்
குறிப்பாக மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மக்கள் தங்களது உடமைகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.