எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பிலான அறிவிப்பு ந.ஶ்ரீகாந்தாவால் வெளியிடப்பட்டது.
ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று அண்மையில் தமிழ் சிவில் சமூகத்திற்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் கைச்சாத்திடப்பட்டது.
சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈபி.ஆர்.எல்.எப், தமிழ் தேசிய பசுமை இயக்கம்,தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவளிக்கவுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை என்பதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.