ஜனாதிபதி தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தேசத்தால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரி வித்துள்ளது.
விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்துக்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கைத் தீவில் உள்ள தமிழர் களை மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்ரெம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இது தொடர்பான கருத்தாடல் இடம்பெற்றிருந்ததோடு, ஏகமனதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய பேரியக்கத்துக்கான தொடக்க புள்ளியாக தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளருக்குரிய தேர்தல் அறிக்கையானது, தமிழர் தேசத்தின் அடிப்படைக் கோட்பாட்டு நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாகக் கருதுவதோடு, பொதுவாக் கெடுப்பை நோக்கிய செயல்முனைப்புக்கான தொடக்க புள்ளியாக எண்ணுகின்றோம் - என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.