ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுவுநிலை வகிக்க வில்லை என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் மோதலில் இந்தியா நடுவுநிலை வகிக்க வில்லை என்றும் இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
உக்ரைன் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை அவரது மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தினார். இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும் பின்னர் இரு நாடுகளின் தூதுக் குழுக்களுடனும் உரையாடினர். அப்போது பேசிய மோடி, "பேச்சுகள் மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் மட்டுமே மோதலுக்கு தீர்வு காண முடியும் என்பதே இந்தி யாவின் நிலைப்பாடு.
உக்ரைனும் ரஷ்யாவும் பேச்சுகளில் ஈடுபட வேண்டும். இதன்மூலம் மோதலுக்கு தீர்வு காண வேண்டும். அமைதிக்கான முயற்சிகளில் முனைப்பான பங்களிப்புகளைச் செய்ய இந்தியா தயாராகவுள்ளது.
இந்த மோதலில் இந்தியா நடுவு நிலை வகிக்கவில்லை. தொடக்கம் முதலே அது ஒரு பக்கம் இருக்கிறது. அது அமைதியின் பக்கம். இந்த மோதலில் முதல் உயிரிழப்பு ஒரு குழந்தை என்பது மனதை வேதனைப்படுத்துகிறது