எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

5 months ago


எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் நிகழ்ச்சி நிரலில் 22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை உள்ளடக்கப்படவில்லை என அவைத்தலைவரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

22வது அரசியலமைப்பு திருத்த பிரேரணை ஜனாதிபதி தேர்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் அவைத்தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

22வது அரசியலமைப்பு திருத்தம் தற்போதைக்கு வராது என நினைக்கிறேன்.

அடுத்த அமர்விற்கான நிகழ்ச்சி நிரலை நேற்று தயாரித்தேன், அது அதில் இல்லை

இந்த திருத்தம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டாலும் அதனால் தேர்தல் பாதிக்கப்படாது. தேர்தல் பாதிக்கப்படும் என்பது பல்வேறு குழுக்கள் மற்றும் படிப்பறிவில்லாதவர்களால் வெளியிடப்படும் கருத்தாகும் என்றார்.

அண்மைய பதிவுகள்