மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல்துறை சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல்துறை சத்திர சிகிச்சை விடுதிகள் திறந்து வைப்பு
அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல் துறை சத்திர சிகிச்சை (ஆண், பெண் இருபாலாருக்குமான) விடுதிகள் நேற்று (12) திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தின் மிக நீண்ட கால தேவையாகவிருந்த எலும்பு முறிவு மற்றும் சிகிச்சைக்கான விசேட விடுதிகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அஸாத் ஹனிபா திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் எலும்பியல் சத்திர சிகிச்சை விசேட நிபுணர்கள் டாக்டர் பி. திலீபன், டாக்டர் ஆர்.எம்.எம். தீபன்,ஏனைய விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
