பெறுமதி சேர் வரி ஏய்ப்புச் சம்பவம் தொடர்பில் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிப்பு
பெறுமதி சேர் வரி ஏய்ப்புச் சம்பவம் தொடர்பில் டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபாய் பெறுமதி சேர் வரியை செலுத்துவதில் தவறிழைத்தமைக்காக உள் நாட்டு இறைவரித் திணைக்களம் குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
உரிய வரிகளை செலுத்துமாறு கடந்த வருடம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, உரிய வரித் தொகை செலுத்தப்படாத காரணத்தினால், பிரதி வாதிகளுக்கு நீதிமன்றம் இந்தத் தண்ட னையை விதித்துள்ளது.