ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி எடுத்த தீர்மானத்தை ஏற்க முடியாது. எம்.பி சிறீதரன் தெரிவிப்பு..

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு எடுத்த தீர்மானத்தை ஏற்க முடியாது என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானத்துக்கான எதிர்வினை வரும் நாட்களில் வெளிப்படுத்தப் படும் என்றும் அவர் கூறியுள்ளார். லண்டனில் தற்போது தங்கியிருக்கும் சிறீதரன் எம். பி. தனது கட்சியான தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று முன்தினம் வவுனியாவில் விடுதி ஒன்றில் கூடிய தமிழ் அரசுக் கட்சியின் 30பேர் கொண்ட மத்திய குழு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. இந்த மத்திய குழுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராசா, சிறீ தரன் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
