கனடாவின் பாதுகாப்புச் செலவீனங்களை அமெரிக்க கடுமையாக விமர்சித்துள்ளது.

5 months ago


கனடாவின் பாதுகாப்புச் செலவீனங்களை அமெரிக்க கடுமையாக விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின், வொஷிங்டன் நனகரில் நடை பெறும், நேட்டோ உச்சி மாநாட்டில் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றுள்ளார்.

கனடாவின் பாதுகாப்புச் செலவு வெட்கக் கேடானது என அமெரிக்க சபாநாயகர் மைக் ஜோன்சன் விமர்சித்துள்ளார்.

32 நேட்டோ உறுப்பினர்களில், 23 நாடுகள் தமது மொத்தச் செலவினத்தில் இரண்டு சதவீததை பாதுகாப்புச் செலவினத்துக்கு ஒதுக்கீடு செய்யும் எதிர்பார்ப்பை எட்டியுள்ளன.

கனடா தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் 1.37 சதவீதத்தைப் பாதுகாப்புக்காக செலவிடுகிறது.

இது 32 நாடுகள் பட்டியலின் கனடாவை 27 ஆவது இடத்திற்கு தள்ளியுள்ளது.

இராணுவ உறுப்பினர்களை ஆள்சேர்ப்பு செய்து, அதிக ஆயுதங்கள். உபகரணங்களை உற்பத்தி செய்வதன் மூலம் இராணுவ தயார் நிலையை அதி கரிக்க கனடா மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.