இலங்கை அமெரிக்காவின் எட்டு Bell 206 ஹெலி, பாகிஸ்தானின் ஒரு FT-7 பயிற்சி விமானம் ஆகியவற்றுடன் விமான படை திறனை மேம்படுத்தவுள்ளது
3 days ago
இலங்கை விமானப்படை இந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து எட்டு Bell 206 ஹெலிகாப்டர்கள் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஒரு FT-7 பயிற்சி விமானம் ஆகியவற்றுடன் தனது விமான படை திறனை மேம்படுத்த உள்ளது . என்று விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்;.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அமெரிக்கா எட்டு TH-57 Sea Ranger Bell 206 ஹெலிகாப்டர்களை விமானப்படைக்கு வழங்கவுள்ளது.
கடந்த செப்டம்பரில், அமெரிக்காவிலிருந்து Beechcraft King Air 360ER விமானம் டிசம்பரில் அவுஸ்ரேலியாவிலிருந்து Beechcraft King Air 350 விமானமும் வழங்கப்பட்டது.
இவை தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.