ஆறு பிரதான கட்சிகள் ஓரணியில் இணைய முன்வந்துள்ளதால் அம்பாறையில் தமிழ் ஆசனத்தை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் வெற்றி.

3 months ago

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் ஆறு பிரதான கட்சிகள் ஓரணியில் இணைய முன்வந்துள்ளதால் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் ஆசனத்தை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளது.

அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிப் பிரதிநிதிகளுடன் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைதீவு பொது நூலக கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எவ், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பலர் பங்குபற்றினர்.

இதில், பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட நிலைமையில் ஓரணியில் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு தமது சம்மதத்தை தெரிவித்ததுடன், இந்தக் கூட்டம் தொடர்பில் தமது கட்சித் தலைமைகளுக்குத் தெரியப்படுத்துவதாக கூறினர்.

கொள்கையளவில் இணங்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பொதுக் கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ் மக்கள் பொதுச் சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான                           இ. விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர்                    கண. வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

"இந்தக் கலந்துரையாடல் முதல்கட்ட வெற்றிதமதும். அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு தமிழ் ஆசனத்தை காப்பாற்றும் வகையில் தமிழ்க் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைக்கும் முயற்சிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் ஆறு பிரதான கட்சிகள் ஓரணியில் இணைய முன்வந்துள்ளதால் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் ஆசனத்தை உறுதிப்படுத்தும் கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளது.

அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிப் பிரதிநிதிகளுடன் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைதீவு பொது நூலக கட்டடத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி, ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எவ், ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் பங்குபற்றினர்.

இதில், பங்குபற்றிய கட்சிகளின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்ட நிலைமையில் ஓரணியில் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கைக்கு

தமது சம்மதத்தை தெரிவித்ததுடன், இந்தக் கூட்டம் தொடர்பில் தமது கட்சித் தலைமைகளுக்குத் தெரியப்படுத்துவதாக கூறினர்.

கொள்கையளவில் இணங்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் பொதுத் தேர்தல் தொடர்பான இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட பொதுக் கட்டமைப்பின் மத்திய குழு உறுப்பினரும், தமிழ் மக்கள் பொதுச் சபையின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான                           இ. விக்னேஸ்வரன் மற்றும் அம்பாறை மாவட்ட சிவில் அமைப்பின் தலைவர்                     கண. வரதராஜன் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

"இந்தக் கலந்துரையாடல் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனும் பேசி வருகின்றோம். அம்பாறை மாவட்ட கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர்.

முதல்கட்ட முயற்சி                          வெற்றியளித்துள்ளது. அடுத்து  சின்னம், ஆசன பங்கீடு தொடர்பில் விரைந்து ஒரு கலந்துரையாடல் மூலம் ஓர் இணக்கப்பாட்டை எடுக்கும் முயற்சியில் எமது சிவில் சமூக கட்டமைப்பும், தமிழ் மக்கள் பொதுச்சபையும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து நிற்பதால் மாவட்டத்தில் ஆசனம் இழக்கப்படும். தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டியிட வேண்டும் எனும் கோரிக்கையின் அடிப்படையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது” என்றனர்.

இதேவேளை, கலந்துரையாடலில் பங்குபற்றிய தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தத் தேர்தல் கூட்டில் தமிழ்த் தேசிய பரப்புக்கு வெளியில் உள்ள கட்சிகளை இணைக்க வேண்டாம் என தங்கள் கருத்தை முன்வைத்திருந்தனர்.