யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம், வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் இணைந்து நடத்திய பண்பாட்டு விழா


யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம், வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடத்திய பண்பாட்டு பெருவிழா சிறப்புற நடந்தது.
சங்கானை கலாசார மத்திய நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்வில் விருந்தினர்கள் சங்கானை பேருந்து நிலையத்திலிருந்து விருந்தினர்கள் பாரம்பரிய பொம்மலாட்டம், குதிரையாட்டம், இன்னியம் ஆகியவற்றின் அணிவகுப்புடன் விழா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
தொடர்ந்து, மங்கலவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டு, நாடாவெட்டி வைக்கப்பட்டு மேடைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
கலை நிகழ்வுகள், கலைஞர்களுக்கான கௌரவிப்புகள், விருந்தினர்களின் உரைகள் என்பன வெகுசிறப்பாக நடைபெற்றன.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பண்பாட்டுப் பெருவிழாவில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில், உத்தியோகத்தர்கள் கலைஞர்கள், பொது மக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
