அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார்.

தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கையின் மீட்புக்கு முக்கிய பங்காற்றிய யு.எஸ்.எயிட் மற்றும் அமெரிக்க திறைசேரி திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொனால்ட் லூ, இலங்கையின் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பை மேற்கொண்டார்.
இதன்போது, இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பொதுவான முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடினோம்.
மேலும், இலங்கையின் மக்கள் நலனுக்காக பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை ஆதரிக்கத் தகுந்த திட்டங்கள், திறன் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் நாம் இணைந்து செயல்படக் கூடிய வழிகளை இதன்போது ஆராய்ந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
