
பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவுக்கு (Alejandro Toledo) 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள கட்டுமான நிறுவனத்துடன் ஊழலில் ஈடுபட்டதாக பெருவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ( Alejandro Toledo) 20 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அலெஜான்ட்ரோ டோலிடோ (Alejandro Toledo) , கட்டுமான நிறுவனத்தில் பல இலட்சம் டாலர்கள் இலஞ்சம் பெற்றுள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பெருவில் நெடுஞ்சாலை அமைக்க அனுமதித்ததற்கு ஓடேபெக்ட் என்னும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து 35 மில்லியன் டாலர் இலஞ்சம் பெற்றதாக டோலிடோ (Alejandro Toledo) மீது அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளார்.
அலெஜான்ட்ரோ டோலிடோ (Alejandro Toledo) 2001 முதல் 2006 வரை பெருவின் அதிபராக பதவி வகித்துள்ளார்.
இந்த வழக்கை அமெரிக்கா விசாரணை நடத்தியது. அதன்படி, மெக்சிகோ, குவாதமாலா, ஈகுவடார் ஆகிய நாடுகளிலும் அமெரிக்கா தனது விசாரணையைத் தொடங்கியது.
மேலும், இந்த விசாரணையில் டோலிடோ உட்பட பெருவின் முன்னாள் ஜனாதிபதிகள் 4 பேர் மீது அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனினும் இந்த ஊழல் வழக்கை அலெஜான்ட்ரோ டோலிடோ (Alejandro Toledo) மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
