சென்னை - யாழ்ப்பாணம் இடையே இண்டிகோ எயார்லைன்ஸ் புதிய விமான சேவையை ஞாயிற்றுக்கிமை ஆரம்பம்.
சென்னை - யாழ்ப்பாணம் இடையே இண்டிகோ எயார்லைன்ஸ் புதிய விமான சேவையை ஞாயிற்றுக்கிமை ஆரம்பித்தது.
சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் 52 பயணிகளுடன் நேற்று பிற்பகல் 03.07 மணிக்கு பலாலியை வந்தடைந்தது.
இந்திய பயணிகள் வாத்திய இசை முழங்க அழைத்து வரப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, மங்கள விளக்கு ஏற்றல், வரவேற்பு நடனம், நினைவுப் பரிசில்கள் வழங்கல், கேக் வெட்டுதல் மற்றும் விருந்தினர்களின் உரை என்பன இடம்பெற்றன.
இதன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து 74 பயணிகளுடன் சென்னையை நோக்கி விமானம் பயணித்தது. விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் பனம்பானம் உள்ளிட்ட யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.
நேற்றைய விமான சேவை ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் மாவட்ட செயலாளர் ம. பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, விமானப்படை அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.