கனடாவில் இடம்பெற்று வரும் வாகன கொள்ளைச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

2 months ago



கனடாவில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் வாகன கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கனடிய மத்திய போக்குவரத்து அமைச்சர் இது தொடர்பான திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.

மத்திய அரசாங்கம் மாகாண மற்றும் பிராந்திய அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் வாகன கொள்ளைகளை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பொதுவாக மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு இடையில் காணப்படும் சில சட்ட இடைவெளிகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் வாகனங்களை திருடி அவற்றை விற்பனை செய்வதாக அவர் சுட்டிக்காட்டினார். 

எனவே இந்த விடயத்தில் மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

அண்மைய பதிவுகள்