கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து யாழ். நோக்கி பயனித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும், மகளுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
பாடசாலை ஒன்றிற்கு திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் அங்கிருந்த இளைஞர்களால் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆங்கில தின போட்டி ஒன்றிற்காக தனது மகளை பாடசாலைக்கு ஏற்றி சென்ற வேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.