சோமாலியாவில் முன்னெ டுக்கப்பட்ட சிறை தகர்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்ட அதேவேளை, 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சோமாலியா தலைநகர் மொகதிசுவில் உள்ள மத்திய சிறையில் அல்-ஷபாப் பயங் கரவாதிகள் சிலர் சிறையை உடைத்து தப்பிக்க முயன்றனர். கைக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி அவர்கள் சிறையில் வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனால் சிறையில் பெரும் பதற்றமான சூழல் உருவானது. பயங்கரவாதிகளின் சதி குறித்து தெரியவந்ததும் இராணுவத்தினர் உடனடியாக சிறைக்கு விரைந்தனர்.
அவர்கள் சிறையை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்புக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சிறைக்குள் சென்று வன்முறையில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மீது துப்பாக் கிச்சூடு நடத்தினர். அதேவேளை யில் பயங்கரவாதிகள் கைக்குண் டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்புக்கும் இடையேயான மோதல் நீண்டநேரம் தொடர்ந்தது. இறுதியில் வன்முறையை ஏற்படுத்தி சிறையிலிருந்து தப்ப முயன்ற 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதேசமயம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 3 இராணுவத்தினர் பலியாகினர். மேலும் இந்த மோதலில் 18 கைதிகளும், 3 இராணுவத்தினரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.