காஸாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று ஐ. நா. ஆதரவு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

2 months ago


காஸாவின் சுகாதார துறையை இஸ்ரேல் அழித்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று ஐ. நா. ஆதரவு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டை கடந்து நீடிக்கிறது.

ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நட வடிக்கையாக காஸா மீது        இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில்  ஹமாஸ் அமைப்பினர் மற்றும் அப்பாவி பலஸ்தீன மக்கள் என இதுவரை 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்தப் போரில் காஸாவின் உட்கட்டமைப்புகள்                      உருக்குலைந்துள்ளன.

இந்த நிலை நீடித்தால் காஸாவை மீண்டும் கட்டமைப்பதற்கு பல நூற் றாண்டுகள் ஆகும்.

இந்த நிலையில், காஸாவின் சுகாதாரத் துறையை இஸ்ரேல் அழித்து வருவதாகவும், இரு தரப்பினரும் மக்களை சித்திரவதை செய்ததாகவும் ஐ. நா. ஆதரவு வல்லுநர் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஆராய்வதற்காக 2021இல் இந்த குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவை ஐ. நா. ஆதரவு மனித உரிமைகள் சபை நியமித்தது.

இந்த குழு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

பலஸ்தீனிய மருத்துவ ஊழியர்களின் வாகனங்களை இஸ்ரேல் குறிவைத்து தாக்குதல் நடத்தி, வேண்டுமென்றே அவர்களை கொல்வது, பிடித்து காவலில் வைத்து சித்திரவதை செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், காஸாவில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ சிகிச்சைக்காக வெளியில் கொண்டு செல்வதற்காக          கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், அந்த அறிக்கையில்                   குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவையெல்லாம் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்றும்                    குற்றஞ்சாட்டியுள்ளது. 

அண்மைய பதிவுகள்