யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
8 months ago

யாழ்ப்பாணம் சேந்தாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் 03 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதை அடுத்து, கடற்கரையில் இருந்த மீன் வாடி மற்றும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
அதில் வாடிகள் சில எரிந்த நிலையில், மூன்று படகுகள் தீக்கிரையாகியுள்ளன.
படகுகள் மற்றும் வாடிகளுக்கு தீ வைக்கப்பட்டதை அடுத்து, ஊரவர்கள் ஒன்று கூடி, தீயினை அனைத்ததுடன், சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவித்தனர்.
மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
